பெரம்பலூர்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி-மின் மோட்டார் இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மனு
|மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி-மின் மோட்டார் இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின் மோட்டார் இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தின் தலைவர் இளங்கோவன் தலைமையில், அச்சங்கத்தினர் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கணபதியை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். அதில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின் மோட்டார் இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அக்கோரிக்கைகளை வருகிற குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற மாவட்ட கலெக்டர் ஆணை வழங்க வேண்டும். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை முழு நேர பணியாளர்களாக அறிவிக்கவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருக்கு கலெக்டர் வலியுறுத்த வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.