அரியலூர்
மேம்பால தடுப்புச்சுவர் சீரமைப்பு
|மேம்பால தடுப்புச்சுவர் சீரமைக்கப்பட்டது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதேபோல் திருச்சி-சிதம்பரம் சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. முக்கிய சாலையான இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் நெல்லித்தோப்பு கிராமத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பக்கவாட்டில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் தடுப்புச்சுவர் விரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் வகையில் இருந்தது. அதனை உடனடியாக சரி செய்ய பொதுமக்களின் கோரிக்கை குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கான்கிரீட் தடுப்புச்சுவர் உடனடியாக சரி செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.