கடும் கூட்ட நெரிசல்... ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
|கூட்ட நெரிசலை சமாளிக்க ரெயில்களில் கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
மதுரை,
தற்போது கோடை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பல ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலை சமாளிக்க சில ரெயில்களில் கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி மே 17-ந் தேதி முதல் மே 22-ந் தேதி வரை சென்னை எழும்பூர் - குருவாயூர் ரெயிலிலும் (16127), மே 17-ந் தேதி முதல் மே 23-ந் தேதி வரை குருவாயூர் - சென்னை எழும்பூர் ரெயிலிலும் (16128), மே 20-ந் தேதி வரை திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா ரெயிலிலும் (16343), மே 17 முதல் மே 21 வரை மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா ரெயிலிலும் (16344) கூடுதலாக தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.