< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் ஒட்டுமொத்த தூய்மை பணி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் ஒட்டுமொத்த தூய்மை பணி

தினத்தந்தி
|
8 April 2023 5:22 PM IST

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது.

திருவண்ணாமலை நகராட்சி மற்றும் தூய்மை அருணை சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற "என் குப்பை, என் பொறுப்பு" எனும் ஒட்டுமொத்த தூய்மைப் பணி நிகழ்ச்சி திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தூய்மை அருணை மேற்பார்வையாளரும், தி.மு.க. நகர செயலாளருமான பா.கார்த்திவேல்மாறன் முன்னிலை வகித்தார். தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் வரவேற்றார்.

பஸ் நிலையத்தில் தூய்மை பணியை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தொடங்கி வைத்தார். அப்போது பஸ் நிலையம் சுற்றுப்புற அனைத்து பகுதிகளிலும் செடி, கொடிகள், பிளாஸ்டிக் கழிவுபொருட்கள் அகற்றி தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து அவரது முன்னிலையில் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் உறுதிமொழியினை தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் ஏற்று கொண்டனர்.

இதில் வார்டு உறுப்பினர்கள் ஆண்டாள் செல்வராஜ், ராணிமுருகன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மால்முருகன், துப்புரவு மேற்பார்வையாளர் மேகநாதன், எஸ்.பி.எம். மேற்பார்வையாளர்கள் ஏ.சரண்யா, பி.தமிழரசி, எம்.ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்