< Back
மாநில செய்திகள்
ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
திருவாரூர்
மாநில செய்திகள்

ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

தினத்தந்தி
|
24 Jun 2023 7:00 PM GMT

தில்லைவிளாகம் அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தில்லைவிளாகம் அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் ஊராட்சி துறைத்தோப்பு இந்திரா காலனிக்கு செல்லும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

10 ஆயிரம் லிட்டர்

இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு அருகிலேயே கிணறு அமைத்து அதன் மூலம் 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் தண்ணீர் ஏற்றி தில்லைவிளாகம் துறைத்தோப்பு, இந்திரா நகர் போன்ற பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முற்றிலும் சேதம் அடைந்து, அதை தாங்கிப் பிடிக்கும் தூண்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. அதன் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.

கோரிக்கை

அந்த கம்பிகளும் துருப்பிடித்து இருப்தால் எந்நேரமும் குடிநீர் தொட்டி இடிந்து விழும் ஆபத்து உள்ளது என கிராம மக்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளி இருப்பதால் உடனடியாக சேதம் அடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்