< Back
மாநில செய்திகள்
பழனி அருகே வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 25-க்கும் மேற்பட்டோர் காயம்
மாநில செய்திகள்

பழனி அருகே வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 25-க்கும் மேற்பட்டோர் காயம்

தினத்தந்தி
|
15 May 2023 12:35 AM IST

பழனி அருகே வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல், பழனி அருகே சுற்றுலா வாகனம் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொடைக்கானலில் இருந்து பழனி நோக்கி வந்த போது கொடைக்கானல் சாலை, 5-வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்த டெம்போ ட்ராவலர் வேன் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்