< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் - சரிசெய்யும் பணிகள் தீவிரம்
|22 Dec 2023 1:39 AM IST
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன.
தூத்துக்குடி,
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள ஆறுமுகநேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. மேலும் அங்கு 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.