< Back
மாநில செய்திகள்
புறக்காவல் நிலையங்கள்
திருவாரூர்
மாநில செய்திகள்

புறக்காவல் நிலையங்கள்

தினத்தந்தி
|
21 Aug 2023 12:15 AM IST

புறக்காவல் நிலையங்கள்

முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் கோவில் அருகே புறக் காவல் நிலையம் அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. அதேபோல் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை தர்கா பகுதியிலும் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இந்த புறக்காவல் நிலையங்களை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹீப், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் பழனிவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்