< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
பாண்டியன் நகர் பகுதியில் தொடர்மின்தடை
|29 May 2023 12:37 AM IST
பாண்டியன் நகர் பகுதியில் தொடர்மின்தடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் தினசரி மின்தடை தொடர்கிறது. இரவு நேரங்களிலும், பகல் வேளைகளிலும் மின்தடை ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலையில் விருதுநகர் மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாளில் மின்தடை செய்யும் நிலையில் அதனைத்தவிர்த்து பிற நாட்களிலும் தொடர்ந்து மின்தடை ஏற்படுவது ஏன்? என தெரியவில்லை என பொதுமக்கள் தவிக்கும் நிலை உள்ளது. எனவே விருதுநகர் மின் பகிர்மானவட்ட அதிகாரிகள் விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் தொடரும் மின்தடையை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.