வெளி மாநில பதிவு எண் விவகாரம்...கால அவகாசம் கேட்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்
|அமைச்சர் சிவசங்கரை சந்தித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் , போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
அடுத்த 3 நாட்கள் விடுமுறை என்பதால் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வெளி மாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர் என்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.