< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - அண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி
|16 Dec 2023 5:45 PM IST
திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தந்தி டிவிக்கு இன்று பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ,
தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 35 கல்லூரிகளில் மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது. இந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது .எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும். இவ்வாறு கூறினார்.