< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோடநாடு குற்றவாளிகளை வெளியுலகிற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம் - வைத்திலிங்கம் பேட்டி
|6 July 2022 10:58 PM IST
கோடநாடு குற்றவாளிகளை வெளியுலகிற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எண்ணம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ள்
சென்னை,
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிப்போம். பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றம் சென்றுள்ளோம். உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியுள்ளது.
கோடநாடு வழக்கில் உண்மையான குற்றவாளியை தமிழக அரசு கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்று பல பேர் கோரிக்கை வைக்கின்றனர்.
எங்களை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் நடந்த சம்பவத்தின், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, வெளியுலகிற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எண்ணம்" என்று அவர் கூறினார்.