< Back
மாநில செய்திகள்
திருச்சி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

தினத்தந்தி
|
17 July 2023 12:55 AM IST

மூளைச்சாவு அடைந்த திருச்சி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகன் கணேசன் (வயது 28). விபத்தில் சிக்கி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேசன் மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது இதயம் மற்றும் நுரையீரலை தானமாக வழங்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கணேசனின் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு எடுத்துச்சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அவரது இதயம் மற்றும் நுரையீரல் எடுக்கப்பட்டு போலீசாரின் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் உடல் உறுப்புகள் திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து காலை 9 மணியளவில் சென்னை நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இதயம் மற்றும் நுரையீரல் கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் செய்திகள்