< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அரசாணை வெளியீடு..!
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அரசாணை வெளியீடு..!

தினத்தந்தி
|
14 April 2023 1:22 PM IST

தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,


தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டது. இதில், மாவட்ட தலைநகர் உட்பட 61 தொகுதிகளில் ஏற்கனவே ஸ்டேடியங்கள் இருப்பது கண்டறியப்பட்டது என தெரிவித்தார்.

எனவே, தமிழகத்தில் மீதமுள்ள 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டு அரங்குகள் நிறுவப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பனி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொளத்தூர், சேப்பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெறும்பூர், ஸ்ரீவைகுண்டம், பத்மநாதபுரம், ஆலங்குடி மற்றும் காரைக்குடி ஆகிய 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தலா ரூ.3 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்