< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
|21 Jun 2022 12:55 PM IST
உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஐகோர்ட் கூறியுள்ளதாவது, "உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனே திரும்பப்பெற வேண்டும். ஓராண்டு பயிற்சி முடித்து ரூ.45 ஆயிரம் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம். ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அரசியல்வாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படக்கூடாது. ஆர்டர்லிகளை பயன்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.