< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
சாலை பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு
|29 Aug 2023 12:37 AM IST
சாலை பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியலூர் ஒன்றியம், தாமரைக்குளத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.12.90 கோடி மதிப்பீட்டில் அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, 2 இடங்களில் சாலையை துளையிட்டு சாலையின் தரத்தை பரிசோதனை செய்து ஆய்வு செய்தார். சாலை பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.