< Back
மாநில செய்திகள்
கொசூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
கரூர்
மாநில செய்திகள்

கொசூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

தினத்தந்தி
|
31 July 2023 11:39 PM IST

கொசூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தோகைமலை அருகே உள்ள கொசூர் கடைவீதி திருச்சி- பாளையம் மெயின் ரோடு மற்றும் வீரப்பூர் மெயின் ரோடு இணையும் மையப்பகுதியில் உள்ளது. இதில் சாலையின் இருபுறமும் சிலர் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடைவீதி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கடவூர் தாசில்தார் முனிராஜ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கோகுல்நாத் மற்றும் அதிகாரிகள் கொசூர் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருகிற 8-ந்தேதிக்குள் அகற்ற வேண்டும், இல்லாவிட்டால் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்