< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மடிக்கணினிகளில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை நீக்க உத்தரவு..!
|14 July 2022 9:02 AM IST
இலவச மடிக்கணினிகளில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை நீக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கல்வித்துறை வசமுள்ள இலவச மடிக்கணினிகளில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை நீக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2011-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் மடிக்கணினிகள் விநியோகிக்க முடியாத நிலையில் கல்வித்துறை வசம் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால் மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அகற்றுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.