< Back
மாநில செய்திகள்
குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க உத்தரவு

கோப்புப் படம்

மாநில செய்திகள்

குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க உத்தரவு

தினத்தந்தி
|
31 May 2022 12:10 PM GMT

குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்படவில்லை என்றாலும் பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் பாதிப்பு உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை, கோவை , திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றை இருந்தால் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல் குரங்கு அம்மை தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்