< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு

தினத்தந்தி
|
27 April 2024 12:30 PM IST

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பஸ்களையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 23 ஆம் தேதி காலை ஸ்ரீரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சில் சீட் கழன்று விழுந்தது. இந்த விபத்தில், பஸ்சில் கண்டக்டராக எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த முருகேசன் (வயது 54) சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

போதிய அளவில் பஸ் பராமரிக்கப்படாததே இத்தகைய விபத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. ஆய்வறிக்கையை போக்குவரத்து செயலாளருக்கு சமர்பிக்க போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்