வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 10 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவு
|வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 10 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில், அறிவியல் ரீதியாக தடயங்கள் சேகரிப்போடு, அதற்கான ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நாளை (வெள்ளிக்கிழமை) 10 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படுகிறது.
குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய சம்பவம் தொடர்பாக வேங்கைவயல் கிராமத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வரும் 6-ம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.