< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணியை சேர்க்க உத்தரவு...!
மாநில செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணியை சேர்க்க உத்தரவு...!

தினத்தந்தி
|
2 Feb 2023 2:14 PM IST

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணியை சேர்க்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் நடத்தும் உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் பல வகையான அசைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டுகிறது. அதில், மாட்டு இறைச்சி உணவையும் சேர்க்கக்கோரி தேசிய பட்டியலின ஆணையம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணிணை சேர்க்க அனுமதி அளித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்