< Back
மாநில செய்திகள்
அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை - கலெக்ட ர் வழங்கினார்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை - கலெக்ட ர் வழங்கினார்

தினத்தந்தி
|
25 May 2022 4:32 PM GMT

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலகில், கிராம உதவியாளர், அலுவலக உதவியாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களில் பணிபுரிந்து பணியிடையே மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.

இதில் ஆரிய பெரும்பாக்கம் கிராம உதவியாளராக பணியாற்றிய சின்ன பையன் என்பவரது மகன் பிரகாஷ் என்பவருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம், தாமல் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றிய பட்டாபி என்பவரது மகன் கவியரசன் என்பவருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம், கீழ்புத்தூர் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றிய சந்திரன் என்பவரின் மகன் அரி என்பவருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணியிடம், உத்திரமேரூர் தாசில்தார் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய நரசிம்மன் என்பவரது மனைவி தேன்மொழி என்பவருக்கு அலுவலக உதவியாளர் பணியிடம், காஞ்சீபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய சரவணன் என்பவரது மனைவி சுஜாதா என்பவருக்கு அலுவலக உதவியாளர் பணியிடம் என மொத்தம் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்