< Back
மாநில செய்திகள்
ரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு ஆணை - அமைச்சர் சிவசங்கர் தகவல்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

ரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு ஆணை - அமைச்சர் சிவசங்கர் தகவல்

தினத்தந்தி
|
13 Oct 2023 12:09 PM GMT

ரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 1666 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின்படி ரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு (விழுப்புரம்-344, சேலம்-84, கோயம்புத்தூர்-263, கும்பகோணம்-367, மதுரை-350, திருநெல்வேலி-242) என மொத்தமாக நகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகளுக்காக 1650 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கும், மலைவாழ் மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து (கோயம்புத்தூர்) கழகத்திற்கு பிரத்யேகமான 16 அடிச்சட்டங்களும் ஆக மொத்தமாக 1666 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்