< Back
மாநில செய்திகள்
போலீஸ் பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆணை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

போலீஸ் பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆணை

தினத்தந்தி
|
28 May 2023 12:01 AM IST

போலீஸ் பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு 2-ம் நிலை காவலர் (போலீஸ்) பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் எழுத்து தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் மருத்துவ சோதனைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை முடித்து தகுதியுள்ள நபர்கள் தமிழக காவல் துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 11 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 9 பேர் மாவட்ட சேம நலப்படைக்கும், 2 பேர் தமிழக சிறப்பு காவல் படைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 11 நபர்களில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக காவல்துறைக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மேற்படி 11 நபர்களுக்கும் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பணி நியமன ஆணையை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்