< Back
மாநில செய்திகள்
271 மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

271 மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை

தினத்தந்தி
|
14 Sept 2022 11:29 PM IST

271 மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை

செம்பனார்கோவிலில் 271 மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை

சமூக நலன் மற்றும் உயர்கல்வி உறுதித்திட்டத்தின்கீழ் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் 'புதுமைப் பெண்" திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5-ந்தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 271 மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

இதுகுறித்து செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் கல்லூரி மாணவி ராஜஸ்ரீ கூறுகையில், இத்திட்டம் தன்னை போன்ற ஏழை மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

கலெக்டர் ஆவேன்

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி மாணவி கயல்விழி கூறுகையில், குடும்பத்தில் உள்ள 3 பெண்களில் முதலாவது பெண்ணாக பிறந்த தனக்கும், தன்னை போன்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவிகளுக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த தொகையை கல்விக்காக செலவழித்து தனது லட்சியப்படி கலெக்டர் ஆவேன் என்றார். ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி மாணவி ஹரிணி கூறுகையில், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்வியை தொடர மாதம் ரூ.1000 உதவித்தொகை புதுமைப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. இந்த தொகையை புத்தகங்கள் வாங்கி அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள பயன்படுத்துவேன் என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்