< Back
மாநில செய்திகள்

கோப்புப்படம்
மாநில செய்திகள்
மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை..!

3 Nov 2023 9:16 AM IST
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் நாளை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.