< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்பார் - வைத்திலிங்கம்
|23 Jun 2022 4:49 AM IST
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.
இந்தநிலையில், அதிமுக பொதுக்குழுவை கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.