< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் புற்றுநோயாகத்தான் இருப்பார்" - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தாக்கு
|16 July 2023 7:59 AM IST
அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் புற்றுநோயாக தான் இருப்பார் என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
மதுரை,
அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மன்னிப்பு கடிதம் தொண்டர்களுக்கு மட்டுமே. ஓபிஎஸ்-க்கு அல்ல;. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை. கட்சிக்கு அவர் செய்த தவறுகள், துரோகங்கள் ஏராளம். திமுகவுடன் இருக்கும் தொடர்புகளை விட்டுவிட்டு ஓபிஎஸ்-ஸால் வரமுடியாது.
அதிமுகவை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் புற்றுநோயாகத்தான் இருப்பார். நிச்சயமாக கட்சிக்கு பலனாக இருக்க மாட்டார். கட்சிக்குள் இருந்து கொண்டே கட்சியை கெடுத்துவிடுவார். அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வராமல் இருப்பதே நல்லது. ஓ.பன்னீர்செல்வம் வருவதால் அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.