< Back
மாநில செய்திகள்
சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டியை காண வந்த ஓ.பி.எஸ்... முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் டுவிட்டரில் கிண்டல் பதிவு
மாநில செய்திகள்

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டியை காண வந்த ஓ.பி.எஸ்... முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் டுவிட்டரில் கிண்டல் பதிவு

தினத்தந்தி
|
7 May 2023 3:52 AM IST

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.

சென்னை,

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியைக் காண திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மைதானத்திற்கு வருகை தந்தனர்.

அந்த வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார். இந்நிலையில் இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கிண்டலாக பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், 'தோனிக்கு பதிலாக தன்னை கேப்டன் ஆக்குமாறு சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் சண்டையிடும் ஓ.பி.எஸ்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்