< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்சியில் ஓ.பி.எஸ். அணி சார்பில் முப்பெரும் விழா - ஏற்பாடுகள் தீவிரம்
|21 April 2023 7:11 PM IST
ஜி கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சி,
திருச்சியில் வரும் 24-ந்தேதி ஓ.பி.எஸ். அணி சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மேடைகள் அமைக்கும் பணி நேற்று பந்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிலையில், ஜி கார்னர் மைதானத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. கொடியை அனுமதி இன்றி பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என ஈ.பி.எஸ். தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், முப்பெரும் விழா நடைபெறும் மைதானத்தைச் சுற்றிலும் அ.தி.மு.க. கொடிகள் நடப்பட்டுள்ளன. இந்த விழாவிற்காக ஏற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர்கள் கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டனர்.