ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்: ஜி.கே.வாசன்
|ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிருகிறோம் என்றும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம் என்றும், பாஜக போட்டியிட்டால் நாங்கள் விட்டு தருவோம் எனவும் ஓபிஎஸ் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது.
இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ், அவருடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் உரிய நிலைப்பாட்டினை தேர்தல் களத்தில் பிரதிபலிக்கின்றனர் என்றார்.
ஓபிஎஸ் உங்களிடம் ஆதரவு கேட்டால், தங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என செய்தியாளர் கேட்டதற்கு, அது அவரது உரிமை, அவரது முடிவு. இதுபற்றி இப்போது கருத்து கூற முடியாது என தெரிவித்தார்.
திமுக பிரச்சாரம் குறித்து அவர் கூறும்போது, தேர்தல் என்றால் முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை பிரசாரம் மேற்கொள்ளத்தான் செய்வார்கள். முதல் நாள் பிரசாரத்தை வைத்து கடைசியில் என்ன நடக்கும் என்று இப்போதே கூறமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.