< Back
தமிழக செய்திகள்
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் - பரபரப்பு போஸ்டர்
தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் - பரபரப்பு போஸ்டர்

தினத்தந்தி
|
20 March 2023 10:54 AM IST

அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

பெரியகுளம்,

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் கட்சியில் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன் முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வரும் நிலையில் அவரது சொந்த ஊரான பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஓ.பி.எஸ். பணியாற்ற வேண்டும் என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒற்றுமையே வலிமை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தொண்டர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் என குறிப்பிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே அ.தி.மு.க.வின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம் என திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சசிகலா, தினகரனுடன் இணைய வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்