< Back
மாநில செய்திகள்
குஜராத் முதல்-மந்திரி பதவியேற்பு விழா: ஓபிஎஸ் குஜராத் பயணம்; பூபேந்திர படேலுக்கு ஈபிஎஸ் வாழ்த்து
மாநில செய்திகள்

குஜராத் முதல்-மந்திரி பதவியேற்பு விழா: ஓபிஎஸ் குஜராத் பயணம்; பூபேந்திர படேலுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

தினத்தந்தி
|
11 Dec 2022 2:01 PM GMT

குஜராத் முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை,

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு உள்ளது. இருவரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,குஜராத் முதல்-மந்திரி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குஜராத் செல்கிறார். குஜராத் செல்லும் ஓ.பன்னீர்செல்வம் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.

இந்தநிலையில், குஜராத் முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் ஈபிஎஸ் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. விழாவில் பங்கேற்க முடியாத சூழலில் உள்ளதாகவும், முதல்-மந்திரியாக பதவியேற்பதற்கு வாழ்த்து கூறி பூபேந்திர படேலுக்கு ஈபிஎஸ் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விளக்க மனு ஆகியவை குறித்தும் உச்ச நீதிமன்றம் நாளை விரிவாக விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓபிஎஸ், பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்