< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணை..!
|21 April 2023 8:27 AM IST
அதிமுக வழக்கில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை மதியம் 2.15 மணிக்கு விசாரிக்கின்றனர்.
அதிமுக வழக்கின் நேற்றைய விசாரணையில் கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டியிட தனக்கு தகுதியுள்ள நிலையில், தன்னை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்றும் அதிமுக பொதுக்குழு செல்லும் என தனிநீதிபதியின் தீர்ப்பு தவறு என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.