< Back
மாநில செய்திகள்
தியாகராயநகரில் மாநகராட்சி விளையாட்டு திடலில் டென்னிஸ் கூடம் அமைக்க எதிர்ப்பு; கிரிக்கெட் மட்டையுடன் இளைஞர்கள் போராட்டம்
சென்னை
மாநில செய்திகள்

தியாகராயநகரில் மாநகராட்சி விளையாட்டு திடலில் டென்னிஸ் கூடம் அமைக்க எதிர்ப்பு; கிரிக்கெட் மட்டையுடன் இளைஞர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
17 July 2023 12:51 PM IST

தியாகராயநகரில் மாநகராட்சி விளையாட்டு திடலில் டென்னிஸ் கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிரிக்கெட் மட்டையுடன் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டென்னிஸ் கூடம்

சென்னை தியாகராயநகரில் சோமசுந்தரம் விளையாட்டு திடல் உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த விளையாட்டு மைதானத்தில் விடுமுறை தினங்களில் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த இளைஞர்களும் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த மைதானத்தில் மாநகராட்சி சார்பில் நவீன டென்னிஸ் கூடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான மண் பரிசோதனையும் நடைபெற்றது.

இளைஞர்கள் போராட்டம்

இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று கிரிக்கெட் விளையாட வந்த இளைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தியாகராயநகர் உஸ்மான் சாலை சிக்னல் அருகே அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவலறிந்து பாண்டிபஜார் போலீசார் விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தாங்கள் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வரும் மைதானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று இளைஞர்கள் உறுதிப்பட தெரிவித்தனர். கையில் கிரிக்கெட் மட்டையுடன் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்