திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
|ஊத்துக்கோட்டை அருகே மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள நயப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவனம் பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்றும் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்று நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நயப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தலைமை தாங்கினார். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் தனியார் நிறுவனர் கூறும் போது நயப்பாக்கம் கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்ற நிலையில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது என்று கூறினார். இது தொடர்ந்து பொதுமக்கள் நயப்பாக்கத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேசும் போது பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் கிருஷ்ணா கால்வாய் குடிநீர், பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.