< Back
மாநில செய்திகள்
கல்குவாரிக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

கல்குவாரிக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 Jun 2023 12:15 AM IST

கல்குவாரிக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் தாலுகா இருமன்குளம், வடக்குபுதூர், வீரிருப்பு, தெற்கு புதூர், அச்சம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஊர் நாட்டாண்மை சுந்தரையா தலைமையில் பல்வேறு வாகனங்களில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், 'சிவகிரி தாலுகா அரியூர் மலைப்பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் 2 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இதனால் கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் இங்குள்ள நீர்நிலை பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த குவாரிகளுக்கு உரிய உரிமங்களை புதுப்பிக்காமல் ரத்து செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்