< Back
மாநில செய்திகள்
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; தாலுகா அலுவலகத்தில் திரண்ட பெண்கள்
தென்காசி
மாநில செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; தாலுகா அலுவலகத்தில் திரண்ட பெண்கள்

தினத்தந்தி
|
2 March 2023 12:15 AM IST

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுரண்டை:

சுரண்டை சிவகுருநாதபுரம் அம்மன் சன்னதி தெருவில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்க கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முயற்சி நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் வேறு இடத்தில் அமைக்க முயற்சித்தும் அங்கும் எதிர்ப்பு வந்ததால் அங்கும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சிவகுருநாதபுரம் அம்மன் சன்னதி தெருவில் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி செய்வதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தாசில்தார் தெய்வசுந்தரியை நேரில் சந்தித்து செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்