< Back
மாநில செய்திகள்
அரசியல் சாசனம் குறித்த கேரள மந்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் அமளி - சட்டமன்றம் முடக்கம்
மாநில செய்திகள்

அரசியல் சாசனம் குறித்த கேரள மந்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் அமளி - சட்டமன்றம் முடக்கம்

தினத்தந்தி
|
6 July 2022 7:33 AM GMT

கேரள மந்திரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னனியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் சிபிஎம் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மந்திரி ஷாஜி ஷெரியன், இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பேசினார். தொழிலாளர் வர்க்கத்தை கொள்ளையடிக்கும் விதமாக இந்திய அரசியலமைப்பு சாசனம் உள்ளதாக ஷாஜி ஷெரியன் பேசியிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை கூடிய கேரள சட்டமன்றத்தில் ஷாஜி ஷெரியனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னனியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சாசனத்தை விமர்சித்த மந்திரி பதவி விலக வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் சட்டமன்றத்தை கூட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து அவையில் கூச்சல் நிலவியதால், சட்டமன்றத்தை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ராஜேஷ் அறிவித்தார்.

மேலும் செய்திகள்