< Back
மாநில செய்திகள்
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம்: இன்று சபாநாயகரை சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு
மாநில செய்திகள்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம்: இன்று சபாநாயகரை சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு

தினத்தந்தி
|
10 Jan 2023 7:19 AM IST

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக இன்று சபாநாயகரை சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவுசெய்துள்ளது.

சென்னை,

சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சட்டசபையில் என்னென்ன பேசவேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது, பொங்கல் பரிசுத்தொகுப்பில் உள்ள குளறுபடிகள் குறித்து பேச அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சி துணைத்தலைராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க இந்த கூட்டத்தொடரில் மீண்டும் வலியுறுத்த உள்ளதாகவும், இதுகுறித்து சபாநாயகரை இன்று சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முடிவு எடுக்கப்படாவிட்டால், சபாநாயகருக்கு எதிராக குரல் எழுப்ப எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்