சேலம்
திருவண்ணாமலை, சதுரகிரிக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
|சேலம் கோட்டத்தில் இருந்து இன்று முதல் திருவண்ணாமலை, சதுரகிரி 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சேலம் கோட்டத்தில் இருந்து இன்று முதல் திருவண்ணாமலை, சதுரகிரி 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சிறப்பு பஸ்கள்
சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பவுணர்மியை முன்னிட்டு இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சேலம் கோட்டத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை, சதுரகிரி ஆகிய பகுதிகளுக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதாவது, சேலம் புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலைக்கு அரூர், ஊத்தங்கரை வழியாகவும், ஆத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கள்ளக்குறிச்சி வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கூட்ட நெரிசல் இன்றி...
இதேபோல் சேலத்தில் இருந்து மதுரை வழியாக சதுரகிரிக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சேலம் கோட்டத்துக்குட்பட்ட நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை, சதுரகிரி ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. எனவே பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.