< Back
மாநில செய்திகள்
சாணார்பட்டியில் மகளிர் போலீஸ் நிலையம் திறப்பு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சாணார்பட்டியில் மகளிர் போலீஸ் நிலையம் திறப்பு

தினத்தந்தி
|
16 Jun 2022 1:40 PM GMT

சாணார்பட்டியில், மகளிர் போலீஸ் நிலையம் புதிதாக திறக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில், புதிதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சாணார்பட்டியில் நடந்த விழாவுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல் தாலுகா, அம்பாத்துரை, சின்னாளப்பட்டி, தாடிக்கொம்பு ஆகிய போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கிற பெண்கள், குழந்தைகள் தங்களுக்கு எதிரான புகார்களை இங்கு கொடுக்கலாம். ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 8 பெண் போலீஸ்காரர்கள் இங்கு பணிபுரிவர். நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் உதவி சூப்பிரண்டு அருண்கபிலன், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திலகா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினகுமாரி, சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, ஜான்சன், அம்பிகா காட்டன் மில் நிர்வாக மேலாளர் குமார், சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ், ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்