< Back
மாநில செய்திகள்
தண்ணீர் பந்தல் திறப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தண்ணீர் பந்தல் திறப்பு

தினத்தந்தி
|
13 April 2023 12:15 AM IST

சங்கராபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

சங்கராபுரம்

சங்கராபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெற்றது. இதற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சன்னியாசி, ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாமலை, துணைசெயலாளர் முனுசாமி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வக்கீல் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் மதியழகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் குமரகுரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து அவர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், வாகனஓட்டிகள் ஆகியோருக்கு வெள்ளரிபிஞ்சு, தர்பூசணி, இளநீர், மோர் ஆகியவற்றை வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், ராஜா, வேலாயுதம், எஸ்.கண்ணன், ஜான்போஸ்கோ, ஜான்சன் அருள்தாஸ், அருண்குமார், பெரியசாமி, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்