< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு - கரையோர கிராமங்கள் பாதிப்பு
|9 Sept 2022 4:01 PM IST
கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மயிலாடுதுறை,
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் உபநீரின் அளவும் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நேற்று மாலை 1 லட்சம் கன அடிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றின் வழியாக தண்ணீர் கடந்து சென்று வங்க கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் செல்வதால், கரையோரம் அமைந்துள்ள முதலைமேடு திட்டு, நாதல்படுகை, வெள்ளை மணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.