< Back
மாநில செய்திகள்
தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
தென்காசி
மாநில செய்திகள்

தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

தினத்தந்தி
|
3 Jan 2023 12:15 AM IST

தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். காலை 6.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள், பக்தி கோஷங்கள் எழுப்பினர். அதன் பிறகு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்