< Back
மாநில செய்திகள்
ஆண்டாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

ஆண்டாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

தினத்தந்தி
|
2 Jan 2023 12:18 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

சொர்க்கவாசல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் மற்றும் மார்கழி நீராட்ட உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பகல் பத்து உற்சவம் கடந்த 23-ந் தேதி அன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. இ்ன்று ராப்பத்து நிகழ்ச்சி தொடங்குகிறது.

10 நாட்கள் நடைபெறும் ராப்பத்து நிகழ்ச்சி தொடங்கும் அன்று காலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதேபோல இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

பாதுகாப்பு பணி

கோவில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்