< Back
மாநில செய்திகள்
தாட்கோ அலுவலகம் திறப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தாட்கோ அலுவலகம் திறப்பு

தினத்தந்தி
|
4 Nov 2022 12:55 AM IST

கள்ளக்குறிச்சியில் புதிதாக தாட்கோ அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக தாட்கோ அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து தொடங்கி வைத்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி தாட்கோ அலுவலகத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மாவட்ட தாட்கோ அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலெக்டர் அலுவலகத்தில் புதியதாக தொடங்கி வைக்கப்பட்ட மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகி தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தாட்கோ மேலாளர் (பொறுப்பு) மாயக்கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் பொதுமக்கள், ஆதிதிராவிடர் நலசங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்