< Back
மாநில செய்திகள்
பள்ளிகள் திறப்பு - 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு - 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தினத்தந்தி
|
2 Jun 2023 2:17 PM IST

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் 7-ந் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு 1,300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சிறப்பு பேருந்துகளில் பயணிக்க பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளுமாறு போக்குவரத்துகழகம் தெரிவித்துள்ளது. மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்