சென்னை
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி உணவகம் திறப்பு
|சென்னை,
தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தில் சென்னை சென்டிரல், பெரம்பூர், பொத்தேரி மற்றும் காட்டாங்கொளத்தூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் ரெயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் முகப்பில் வாகன நிறுத்தும் இடத்தின் அருகே தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட ரெயில் பெட்டி உணவகத்தை சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈரயா நேற்று தொடங்கி வைத்தார். உள்ளே இருந்தபடி 40 பேரும், வெளியில் நின்றபடி 110 பேரும், ரெயில் பெட்டி உணவகத்தின் மேற்கூரையில் 26 பேரும் அமர்ந்து சாப்பிடலாம். தனியாருக்கு 2 வருட காலத்துக்கு ரூ.2.2 கோடிக்கு ரெயில்வே இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. விரைவில் பொத்தேரி, பெரம்பூர் மற்றும் காட்டாங்கொளத்தூர் ரெயில் நிலையங்களில் ரெயில் பெட்டி உணவகம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.